தடுப்பூசி போடலைன்னா வேலைக்கு வரமாட்டோம் …. ஏர் இந்தியா விமானிகள் சங்கம்

விமான ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றால், அவர்கள் பணிக்கு வரமாட்டார்கள் என ஏர் இந்தியா விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வரும் நிலையில், அதை தடுக்க தடுப்பூசி அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் நாடு முழுவதும் தற்போது தடுப்பூசி தட்டுப்பாடு  நிலவி வருகிறது.  இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட விமான ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால், ஊழியர்கள் பணிக்கு செல்ல வரமாட்டார்கள் என விமானப் போக்குவரத்துறை   இயக்குனருக்கு ஏர் இந்திய விமானிகள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
Back to top button