விளையாட்டு

இந்திய வீரர்களை சீண்டிய ஆஸி., ரசிகர்கள்… டெஸ்ட் போட்டி நிறுத்தப்பட்டதால் பரபரப்பு…

சிட்னி டெஸ்டில் இந்திய வீரர்களை இனவெறி ரீதியாக ஆஸி., ரசிகர்கள் சீண்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி., அணி 338 ரன்களும், இந்தியா 244 ரன்களும் எடுத்தன. இதனையடுத்து 3வது நாளான நேற்று  2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., அணி ஆட்டநேர முடிவில் 29 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது.

இதற்கிடையில் நேற்றைய போட்டியின் போது இந்திய வீரர்களான பும்ரா, சைனி, சிராஜ் ஆகியோரை இன ரீதியாக ரசிகர்கள் கிண்டல் செய்ததாக புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடந்த 4வது நாள் ஆட்ட நேரத்தின் போது மீண்டும் இந்திய வீரர்கள் இனவெறி ரீதியாக ஆஸி., ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டனர்.

Image

இதனால் கேப்டன் ரஹானே மூலம் கள நடுவர்களிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த ரசிகர்களை காவல்துறையினர் மைதானத்தை விட்டு வெளியேற்றினர். இதனைத் தொடர்ந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்கிருந்த திரையில், இனவெறி தாக்குதல் நடத்தும் ரசிகர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும், வீரர்கள் யாரவது இனவெறி தாக்குதலுக்கு உள்ளானால் உடனே புகார் அளிக்கவும் என்றும் வாசகம் ஒளிபரப்பப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button