தமிழ்நாடு

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் – எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி?

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு 19 ஆயிரத்து 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

அதில், கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறைக்கு ஆயிரத்து 224 கோடியே 26 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்பு மானியத் தொகை 5 ஆயிரத்து 344 கோடியில் இருந்து 3 ஆயிரத்து 979 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மினி கிளினிக் திட்டத்திற்காக 144 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறைக்கு 9 ஆயிரத்து 567 கோடியே 93 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சத்துணவுத் திட்டத்திற்கு ஆயிரத்து 953 கோடியே 98 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் உயர் கல்வித்துறைக்கு 5 ஆயிரத்து 478 கோடியே 19 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு 19 ஆயிரத்து 420 கோடியே 54 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் நெடுஞ்சாலை துறைக்காக 6 ஆயிரத்து 23 கோடியே 11லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காவல்துறைக்கு 9 ஆயிரத்து 567 கோடியே 93 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெடில் தீயணைப்பு துறைக்கு 436 கோடியே 68 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீதித்துறைக்கு ஆயிரத்து 437 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துக்கு 2 ஆயிரத்து 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில், அம்ருத் திட்டத்திற்கு ஆயிரத்து 450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button