கவர் ஸ்டோரி

“ஆண்களையும் கொண்டாடுவோம்” – சர்வதேச ஆண்கள் தினம் இன்று….

உலகமெங்கும் சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

நிச்சயம் நம்மில் அனைவருக்கும் பெண்கள் தினம், குழந்தைகள் தினம், அன்னையர் தினம் உள்ளிட்ட பல சிறப்பு தினங்கள் நினைவில் இருக்கும். ஆனால் ஆண்கள் தினம் என்றைக்கு என்று கேட்டால் பதில் தெரியாமல் விழிப்போம். அந்த அளவுக்கு இந்த தினமானது இதுவரை அமைந்துள்ளது.

ஒரு குடும்பத்தின் வளர்ச்சியில் பெண்களை விடவும் ஆண்கள் ஒருபடி மேலே தான் தங்களது வாழ்நாளை கழிக்கிறார்கள். இந்தாண்டு ”ஆண்கள் மற்றும் சிறுவர்களின் உடல்நலன் மேம்பாடு” என்ற கொள்கையின் அடிப்படையில் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் ஆண்களின் பங்களிப்பை போற்றும் வகையிலும், அவர்களின் மன அழுத்தம், ஒடுக்குமுறை ஆகியவற்றிலிருந்தும் விடுபடவும் அவர்களுக்கு என்றும் துணையிருப்போம். இந்த ஆண்கள் தினம் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா,  உள்ளிட்ட 70 நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் நடிகர் கவுண்டமணியின் காமெடி காட்சி ஒன்று கடந்த ஆண்டுகளை போல பலரின் ஸ்டேட்டஸ்களிலும் இடம் பிடித்துள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button