விளையாட்டு

ஐபிஎல் 2021: பல கோடிகளில் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர்கள்

14-வது ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலத்தில் தென் ஆப்ரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அதிக விலையான 16.25 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சிறந்த வீரர்களை தேர்ந்து எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

சென்னையில் 14-வது ஐபிஎல் டி-20 போட்டிக்கான மினி ஏலம் நடைபெற்றது. இதில் தென் ஆப்ரிக்க வீரர் கிறிஸ் மோரிஸை ஏலம் எடுக்க பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் கடுமையாக மோதின. 15 கோடியை தாண்டி சென்ற இந்த ஏலத்தில் இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இதனை தொடர்ந்து நியூசிலாந்தை சேர்ந்த கைல் ஜாமீசனை பெங்களூரு அணி 15 கோடிக்கு ஏலம் எடுத்தது.பின்னர் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை கடும் போட்டிக்கு பிறகு பெங்களூரு அணி இறுதியாக 14 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஆஸ்திரேலிய இளம் வீரர் ரிச்சர்ட்சனை 14 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் கடுமையாக போராடி ஏலம் எடுத்தது.கர்நாடகாவை சேர்ந்த இளம் வீரர் கிருஷ்ணப்பா கவுதமை 9.25 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ரிலே மெரிடித்தை பஞ்சாப் கிங்ஸ் அணி 8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது.இதையடுத்து இங்கிலாந்து வீரர் மொயின் அலியை 7 கோடி ரூபாய்க்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது.

இங்கிலாந்தை சேர்ந்த டாம் கரனை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 கோடிக்கு ஏலம் எடுத்தது.ஆஸ்திரேலிய வீரர் நாதன் கோல்டர் நையிலை மும்பை இந்தியன்ஸை அணி 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

தொடர்ந்து வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் 3 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வானார்.சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பியூஸ் சாவ்லாவை முப்பை இந்தியன்ஸ் அணி 2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.

கடந்த சீசன்னில் ராஜஸ்தான் அணிக்கு கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை 2.20 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வாங்கியது. இந்திய வீரர் ஷிவம் துபே 4.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது.

தொடர்ந்து வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் 3.20 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தேர்வானார்.இங்கிலாந்து வீரர் டேவிட் மலனை பஞ்சாப் கிங்ஸ் அணி 1.25 கோடிக்கு வாங்கியது.

இந்திய வீரர் உமேஷ் யாதவ்வை டெல்லி அணி ஒரு கோடிக்கு எலத்தில் எடுத்தது.இந்திய அணியின் முன்னனி வீரர்கள் ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ் உள்ளிட்டோரை முதல் சுற்றில்  விலை போகவில்லை. ஆனால் 2வது சுற்றின்போது அடிப்படை விலையில் ஏலம் போனார்கள். ஹர்பஜன் சிங்கை ரூ. 2 கோடிக்கும், பென் கட்டிங் ரூ.75 லட்சத்துக்கும், கருண் நாயர் ரூ.50 லட்சத்துக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button