பொதுமக்களே உஷார்… இந்த தகவல் முழுக்க முழுக்க பொய்…. யாரும் நம்பாதீங்க….

பெண்கள் பாதுகாப்புக்காக காவல்துறை நடவடிக்கை எடுத்ததாக பரவி வரும் தகவல் பொய்யானது என நெல்லை துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் விளக்களித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பெண்கள் தனியாக ஆட்டோ அல்லது வாடகை காரில் பயணம் செய்ய நேரும் போது, அவ்வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்ட ஒரு நம்பருக்கு எஸ்எம்எஸ் செய்தால் ஜிபிஎஸ் கருவி மூலம் காவல்துறை அந்த வாகனத்தை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைப் பலரும் பகிர்ந்து வந்த நிலையில், ஒருவர் நெல்லை மாநகர துணை ஆணையர் அர்ஜூன் சரவணனின் ட்விட்டர் பக்கத்தில் “ இது உண்மையா சார் ??” என கேள்வியெழுப்பி இருந்தார்.
அதற்கு விளக்கமளித்த அர்ஜூன் சரவணன், “ இது முழுக்க பொய். தமிழ்நாடு காவல்துறையில் இப்படி எந்த திட்டமும் இல்லை. பாதுகாப்பிற்காக “காவலன் SoS” செயலியை பயன்படுத்தவும் . “கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்” என தெரிவித்துள்ளார்.
முழுக்க பொய்.
தமிழ்நாடு காவல்துறையில் இப்படி எந்த திட்டமும் இல்லை. பாதுகாப்பிற்காக “காவலன் SoS” செயலியை பயன்படுத்தவும் .“கண்ணால் காண்பதும் பொய்
காதால் கேட்பதும் பொய்
தீர விசாரிப்பதே மெய்” https://t.co/1yl31DPODZ— Arjun Saravanan (@ArjunSaravanan5) January 25, 2021
எனவே எந்த ஒரு தகவலையும் பகிர்வதற்கு முன் அதன் உண்மை தன்மையை தெரிந்துகொண்டு பகிர வேண்டும். இல்லையென்றால் பகிரும் உங்களுக்கும், அதனை நம்பியவர்களுக்கும் சிக்கல் தான் ஏற்படும்.
http://bio-catalyst.com/ – buy fucidin
buy doxycycline
[url=http://bio-catalyst.com/]cephalexin capsules[/url] buy ketoconazole generic