உலகம்

ஜப்பானில் புதிய கொரோனா கண்டுபிடிப்பு… அதிர்ச்சியில் உலக நாடுகள்…

ஜப்பானில் புது வகையான கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2020 ஆம் ஆண்டு முழுவதும் உலக நாடுகளில் ஒரு பேரிழப்பை ஏற்படுத்தியது. தற்போது பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வந்த நிலையில், கடந்த நவம்பரில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனாவும் பரவ தொடங்கியது.

இந்தியாவிலும் இதுவரை 20க்கும் மேற்பட்டவர்களுக்கு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த முறை போல் இல்லாமல் இம்முறை தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்த உலகநாடுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் பிரேசில் நாட்டில் இருந்து ஜப்பானின் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்த 4 பேருக்கு புதிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை என தெரிய வந்துள்ளது. இவர்களில் 2 பேருக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறி இல்லை என்றும், தற்போது 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய தடுப்பூசிகள் இந்த புதிய கொரோனாவை தடுக்குமா என உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதுகுறித்து ஜப்பான் அரசு உலக நாடுகளுடனும், சுகாதார நிறுவனத்துடனும் ஆலோசனை நடத்தி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button