விளையாட்டு

4வது டெஸ்டில் ஆடப்போவது யார்? … முக்கிய வீரர்கள் விலகலால் பரிதவிக்கும் இந்திய அணி…

ஆஸ்திரேலிய தொடரில் விளையாடி வரும் இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து காயத்தால் விலகியுள்ளதால் இந்திய அணி திண்டாடி வருகின்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டி20, ஒருநாள் தொடர்களை முடித்து தற்போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜடேஜா, ஹனுமா விஹாரி ஆகியோர் காயமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது பும்ராவும் இணைந்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக  அவர் விலகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் 4வது டெஸ்ட்டில் ஆடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஷர்துல் தாகூர்,  டி.நடராஜன், மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

India vs Australia Live Score, 3rd Test Day 2: Lunch: Australia 249/5;  Bumrah, Jadeja strikes give India control

ஆனால் போட்டி நடக்கும் பிரிஸ்பேன் மைதானத்தில் இவர்களுக்கு போதுமான அனுபவம் இல்லை என்பதால் அணிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button