சிவில் இஞ்சினியரா நீங்கள்… ரூ.1 லட்சம் வரை சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…

ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் புதிய வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உதவி பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 19 ஆம் தேதி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 காலிப் பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையிலும் , வாய்மொழித் தேர்வும் நடத்தி பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கான மாத ஊதியம் ரூ 36, 400 முதல் ரூ 1,15,700 வரை வழங்கப்படும். இதற்கான வயது வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணம் ரூ.400 ஆகும்.
எஸ்சி, எஸ்டி, கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், பிடபிள்யூடி, எஸ்சிஏ போன்றவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய http://www.tahdco.com என்ற இணையதளத்தை உபயோகிக்கவும்.
There is evidently a bunch to identify about this. I consider you made certain nice points in features also.