அரசியல்செய்திகள்தமிழ்நாடு

திமுகவில் இணைகிறாரா காடுவெட்டி குருவின் மகன்? .. உதயநிதியுடனான சந்திப்பால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

கனலரசன் தான் தொடங்கிய மாவீரன் மஞ்சள் படை அமைப்புக்கு ஆதரவு தரக்கோரி வன்னியர் சங்க தலைவர்கள் பலரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

மறைந்த முன்னாள் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பேசிய நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தவர் காடுவெட்டி குரு. இவர் உடல்நலக்குறைவால் கடந்த 2018 ஆம் ஆண்டு இறந்தார். அவரது மருத்துவச் செலவுக்கு உதவவில்லை என்று கூறி குருவின் குடும்பத்தினர் பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர்.

அவரது மகன் கனலரசன் கடந்த பிப்ரவரி மாதம் மாவீரன் மஞ்சள் படை என்கிற பெயரில் புதிய அமைப்பை தொடங்கினார். அடுத்த சில நாட்களில் பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்தார். இதனால் கனல் பாஜகவில் இணைய உள்ளதாகவும், அவருக்கு கட்சியில் மிகப்பெரிய பொறுப்பு தரப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் அவர் இன்று திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்துள்ளார். இதன் மூலம் கனலரசன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு, சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button