பொழுதுபோக்கு

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோருக்கு, கலைமாமணி விருதுகள் அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோருக்கு, கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்,ராமராஜன்,யோகிபாபு, கர்ணன் பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், சரோஜாதேவி, சௌகார் ஜானகி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் டி. இமான், நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் நடிகர் ராமராஜன், பாடகி ஜமுனா ராணி, நடிகை சங்கீதா, இயக்குநர்கள் லியாகத் அலி கான், மனோஜ்குமார், கவுதம் மேனன், ரவி மரியா, இசையமைப்பாளர் தினா, டான்ஸ் மாஸ்டர்கள் சிவசங்கர்,ஸ்ரீதர், ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேசுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதால், சமூக வலைத் தளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Related Articles

2 Comments

  1. I loved as much as you will receive carried out right here. The sketch is tasteful, your authored subject matter stylish. nonetheless, you command get got an impatience over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again since exactly the same nearly very often inside case you shield this increase.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button