இந்தியாதமிழ்நாடு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – கமலஹாசன் குற்றச்சாட்டு;

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்டது ஓமலூரில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் பஸ்நிலையம் அண்ணா சிலை அருகே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர்  செல்லும் இடமெல்லாம் இது போன்ற வரவேற்பு உள்ளது. கட்சி கூட்டங்களில் பாதுகாப்பாக பயமின்றி மகளிர் வந்து நிற்கும் கட்சி நமது கட்சி.

மகளிர்க்கு பாதுகாப்பு இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை எங்கள் சகோதர்கள் பாதுகாப்பார்கள். விழா முடிந்தபின் மகளிரை பாதுகாப்பாக இடம் சேர்ப்பார்கள். இதுதான் கடமை கூட்டம் முடிந்ததும் இப்பகுதியில் உள்ள குப்பையை அகற்றிவிட்டுதான் நமது தொண்டர்கள் செல்வார்கள்.

எனவே இவர்களிடம் ஆட்சியை கொடுத்தால் சுத்தமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பாகவும் இருக்கும் என மக்கள் உணர்வார்கள். அதற்கு இதுதான் முன் உதாரணம். நமது கட்சியில் கல்வியாளர்கள், அனுபவமுள்ளவர்கள் தம்முடன் நம் கட்சியில் இணைந்து உள்ளனர்.

மாற்றத்திற்கான எல்லா சாயல்களும் அலுவலகத்திலும் நாம் செல்லும் இடமெல்லாம் தெரிகிறது. மகளிருக்கான புதிய திட்டங்கள், சம உரிமை சட்டங்கள் இயற்றிகொண்டு இருக்கிறோம்.

சுற்று சூழல்பற்றி பேசும் ஒரே கட்சி மக்கள் நீதி மய்யம்தான். சுற்றுசூழல், விவசாயம், நீர்மேலாண்மை பற்றி சீரியசாக பேசும் ஓரே கட்சி மக்கள் நீதி மய்யம் தான் தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்டது. மக்கள் நீதி மய்யமும்தான் ஊர் கூடி தேர் இழுப்போம் என்று  பேசினார்

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button