விளையாட்டு

“என் ஹீரோவே அவர் தான்” – தமிழக வீரரை புகழும் கபில்தேவ்

ஐபிஎல் தொடரில் அசத்திய நடராஜனை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் புகழ்ந்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் களமிறங்கி விளையாடினார். வேகப்பந்து வீச்சாளரான நடராஜன்  ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கராக போடும் திறமை வாய்ந்தவர். அவர் இந்த சீசனில் மொத்தம் 16 விக்கெட்டுகளை கைப்பற்றி பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த திறமையால் அவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸி. அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் களமிறங்க உள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் தனது ஹீரோவே நடராஜன் தான் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

கடந்த 100 வருடங்களில் இவரைப் போல யார்க்கர் பந்தை  யாரும் வீசவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button