ரசிகர்களை கவர்ந்த “கண்டா வரச் சொல்லுங்க” – யூ-ட்யூப்பில் தொடரும் சாதனை

நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் முதல் பாடல் 69 லட்சம் பார்வைகளை யூ-ட்யூப்பில் கடந்துள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ், மலையாள நடிகை ராஜிஷா விஜயன் லால், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள படம் ‘கர்ணன்’. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படமானது ஏப்ரல் 9 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி படத்தின் முதல் பாடலாக ‘கர்ணன் அழைப்பு’ வெளியானது. நாட்டுப்புறப்பாடகி கிழக்குழி மாரியம்மாள் குரலில், இயக்குநர் மாரி செல்வராஜ் வரிகளில் இப்பாடல் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. பலரும் இதனை ரிபீட் மோடில் கேட்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்பாடல் யூ-ட்யூப்பில் 69 லட்சம் பார்வைகளை கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மற்ற பாடல்களும் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
I just opened it today and tried it. It was smooth and the quality was good. The hair volume was a lot and full. The point is to bring it on! ! Hahahahaha, bring it very fluffy, really great, the color is very natural [强] I will definitely recommend it to pot friends