அடிக்கடி போனில் பேசிய மனைவி… கோபத்தில் சுட்டுக்கொன்ற கணவன்…

கேரளாவில் மனைவி அடிக்கடி போனில் பேசியதால் ஆத்திரத்தில் கணவன் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் காசர்கோடை அடுத்த கனதுார் பகுதியில் விஜயன் – பேபி தம்பதியர் தனது 5 வயது மகனுடன் வசித்து வருகின்றனர். இருவருக்குமிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை விஜயன் அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனது மனைவி பேபி அடிக்கடி ஒருவருடன் போனில் பேசுவதாகவும், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த இருவரையும் சனிக்கிழமை காவல் நிலையத்திற்கு வருமாறு போலீசார் அழைத்திருந்தனர்.
ஆனால் அன்றிரவே இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு ஏற்படவே துப்பாக்கியால் மனைவியை சுட்டுக்கொன்றுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வரவே,விஜயன் அங்கிருந்து தப்பியுள்ளார். சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள் பேபி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில், விஜயன் அருகிலுள்ள ரப்பர் தோட்டத்தில் தற்கொலை செய்துக் கொண்டது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.