செய்திகள்விளையாட்டு

தங்க நகைகளுடன் மாட்டிக்கொண்ட மும்பை இந்தியன்ஸ் வீரர்…!

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் குர்ணால் பாண்டியா விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக நடப்பு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் போட்டியில் பங்கேற்ற அணி வீரர்கள் சொந்த ஊர் திரும்பினர். இதில் மும்பை அணி வீரர் குர்ணால் பாண்ட்யா துபாயில் இருந்து மும்பை திரும்பினார்.

அவரிடம் ஏராளமான தங்கம், விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததால் சுங்கத்துறை அதிகாரிகள் பாண்ட்யாவை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் இருந்த 2 வாட்ச்கள் அவரின் சகோதரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு சொந்தமானது என்றும், அவர் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றதால் தான் கொண்டுவந்ததாகவும் குர்ணல் தெரிவித்தார்.

அந்த கைக்கடிகாரங்கள் உண்மையானவை என்பதால் முறைப்படி குர்ணால் பாண்ட்யாவுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button