தமிழ்நாடு

என் வீட்டில் கல் எறிய சொன்னதே ஸ்டாலின் தான்…ஆவேசமான குஷ்பூ… அதிர்ச்சியில் திமுக…

2013 ஆம் ஆண்டு தன் வீட்டில் கல்லெறிய சொன்னது திமுக தலைவர் ஸ்டாலின் தான் என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார இந்து சமுதாயம் சார்பில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன், நடிகை குஷ்பு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய நடிகை குஷ்பூ திமுகவையும், காங்கிரஸையும் சரமாரியாக விமர்சித்தார்.

திமுகவைப் போல காங்கிரஸிலும் குடும்ப அரசியல் நடப்பதாக தெரிவித்தார். தி.மு.க ஆட்சியில பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததுன்னு சொல்ற இந்த நேரத்தில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். இதே திமுகவில் நான் இருந்தபோது, திருச்சியில ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். அப்போது என் வீட்டில் சிலர் கல்லெறிந்தார்கள்.

நான் பதறிப்போய் ஸ்டாலினைப்  பார்க்க சென்றேன். ஆனால் அவர் சாப்பிட்டு கொண்டு இருப்பதாகவும், இப்போது பார்க்க முடியாது என்றும் கூறினர். அப்போது எனக்கு புரிந்தது, என் வீட்டில் கல் எறிய சொன்னதே ஸ்டாலின் தான் என்று அவர் ஆவேசமாக கூறினார். நான் கட்சி மாறியதாக கூறினார்கள்.   எங்கே நமக்கு போட்டியாக வந்துவிடுவாளோ என்ற பயத்தில் நான் இக்கட்டான நிலைக்கு ஆளானேன். அதனால் மாறினேன் என குஷ்பூ தெரிவித்தார்.

என்னதான் குஷ்பூ 7 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகினாலும் இதுவரை அக்கட்சியை பெரிய அளவில் விமர்சித்தது இல்லை. ஆனால் தற்போது பகிரங்கமாக விளாசியுள்ளதால் இது திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button