இதே உங்க வீட்டு பெண்ணுக்கு நடந்தா என்ன செய்வீங்க? என் மூஞ்சை வச்சி மீம்ஸ் போடுறாங்க… போலீசாரை மிரட்டிய பெண் கண்ணீர் பேட்டி!!

சென்னை சேத்துப்பட்டில் மாஸ்க் அணியாமல் சென்றவருக்கு அபராதம் விதித்தபோது, அவர் சண்டையிட்ட வீடியோ வைரலான விவகாரத்தில் பெண் வழக்கறிஞர் விளக்கமளித்துள்ளார்.

இதே உங்க வீட்டு பெண்ணுக்கு நடந்தா என்ன செய்வீங்க? என் மூஞ்சை வச்சி மீம்ஸ் போடுறாங்க… போலீசாரை மிரட்டிய பெண் கண்ணீர் பேட்டி!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், காவல்துறையினரும் ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ஊரடங்கு நேரத்தில் சேத்துப்பட்டு சிக்னலில் வந்த காரை போக்குவரத்து போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது காரில் சென்ற பெண் முகக்கவசம் அணியாததால், ரூ.500 அபராதம் விதித்தனர். இதையடுத்து அந்த பெண் தனது தாயாருக்கு போன் செய்யவே, அவர் பிஎம்டபிள்யூ காரில் வந்திறங்கினார். அவர் அங்கிருந்த போலீசாரை “மவனே உன் யூனிபார்மை கழட்டிடுவேன், கொலை செஞ்சிடுவேன்” என்று மிரட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், அங்கு நடந்தவை குறித்து அந்தபெண் பேட்டி அளித்துள்ளார்.

இதில் மகள் ப்ரீத்தி கூறுகையில், தனது அம்மாவுக்கு மருந்து வாங்க சென்றபோது தான் போலீசார் தன்னை மடக்கியதாகவும், மருந்து வாங்க செல்வதாக கூறியும் தனது காரை ஓரம் நிறுத்தினார்கள் என்றும் கூறினார். டாக்குமெண்டுகளை காண்பித்தும் அபராதம் போட்டதால், அபராதம் போடாதீர்கள், வீட்டில் அனைவரும் வழக்கறிஞர்கள் என கூறியதாகவும், பின்னர் ஒருமையில் பேசி அறிவில்லையா? என கேட்டதாகவும் கூறினார். தனது அம்மாவிடம் வந்த போலீஸ் ஒருவர், யூனிஃபார்மை கழட்டி காட்டவா? என தவறான அர்த்தத்தில் கேட்டதாகவும், அதனால்தான் அம்மா கோவம் வந்து கெட்ட வார்த்தையில் திட்டியதாகவும் கூறியுள்ளார்.

 இதுகுறித்து ப்ரீத்தியின் தாய் கூறுகையில், தனது மகளை மடக்கி அபராதம் விதித்தார்கள், பின்னர் வீட்டிற்கு அனுப்பாமல் ஒருமையில் பேசியது ஏன்? என கேட்டுள்ளார். மேலும், தன்னை போடி என சொன்னதால்தான் தான் போடா என சொன்னதாகவும், அவர்கள் எடுத்த வீடியோ முழுக்க முழுக்க தன்னை மட்டுமே ஃபோகஸ் செய்ததாகவும் கூறினார். எல்லாம் பேசிவிட்டு வரும்போது, என்னை யூனிபார்ம் கழட்டுவேனு சொல்றியே, யூனிஃபார்ம கழட்டி காமிக்கட்டா என கேட்டதாகவும் கூறியுள்ளார்.

இதனால் தான் கோபம் வந்து கத்தினேன் என கூறிய ப்ரீத்தியின் தாய், தன்னை கிண்டல் செய்து மீம்ஸ் போடுவதாகவும், நாளை அவர்கள் வீட்டில் இதே நிலை ஏற்பட்டால் என்ன செய்வார்கள் எனவும் கேட்டுள்ளார்.