செய்திகள்தமிழ்நாடுநாமக்கல்

மாமியாருக்கு கொரோனா பாதிப்பு … மருமகள் கிணற்றில் குதித்து தற்கொலை..

கொரோனா நோய் தொற்று குறித்து எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதுகுறித்த பயத்தினால் தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

மாமியாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தனக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவிய நாளில் இருந்து அதுகுறித்த அச்சம் மக்களிடையே விலகாமல் இருந்து வருகிறது. நோய் பயம் காரணமாக சொந்த உறவுகளை கூட வீட்டில் அனுமதிக்காத நிகழ்வுகள் கூட பல இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஷகிலா என்பவர் கொரோனா அச்சம் காரணமாக அங்குள்ள கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கட்டணாச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணி புரிந்து வரும் ஷகிலாவின் மாமியார் சாஜிதாபேகமுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேசமயம் கணவர் ஷாஜகானும் நிமோனியா வைரஸ் பாதிப்பால் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே ஷாகிலா விற்க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தனக்கும் கொரோனா தொற்று வந்துவிடுமோ பயத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நேற்று மதியம் முதல் ஷகிலாவை காணவில்லை என அவரது மகன் சாகுல் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் கட்டணாச்சம்பட்டியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது தோட்டத்தின் கிணற்றில் பெண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு வந்த ராசிபுரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சடலத்தை மீட்டனர். விசாரணையில் இறந்தது காணாமல் போன கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் ஷகிலா என்பது தெரியவந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Articles

74 Comments

  1. You could definitely see your skills within the article you write.

    The sector hopes for more passionate writers such as you who are
    not afraid to mention how they believe. At all times go after your heart.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button