தமிழ்நாடு

சட்டப்பேரவையில் வ.உ.சி, ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் படங்கள் திறப்பு

தமிழக சட்டப்பேரவையில் வ.உ.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரது உருவப்படங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களை கௌரவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், வ.உ.சிதம்பரனார், ப.சுப்புராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் படங்களை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். விழாவில் சபாநாயகர், துணை முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த மூவரின் படங்கள் திறக்கப்பட்டதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் உள்ள தலைவர்கள் படங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

படங்களை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர்,, மூன்று தலைவர்களின் வாழ்க்கை மற்றும் நாட்டிற்காக அவர்களாற்றிய பணிகள், அர்ப்பணிப்பு உள்ளிட்டவற்றை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.

Related Articles

3 Comments

  1. Howdy, i read your blog occasionally and i own a similar one and i was just
    curious if you get a lot of spam comments?
    If so how do you reduce it, any plugin or anything you can advise?
    I get so much lately it’s driving me mad so any support is very much appreciated.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button