தமிழ்நாடு

‘ஸ்டாலின் முதல்வரான பின்னே சட்டசபைக்கு வருவோம்…இது உறுதி’ – துரைமுருகன் பேச்சு

சட்டமன்றத்தில் அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட் உரையை புறக்கணித்து  திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாசிக்க தொடங்கினார். அப்போது குறுக்கிட்ட திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தங்களைப் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தமிழகத்தின் வளர்ச்சியை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்று விட்டதாகக் கூறினார்.

மேலும் மீண்டும்  திமுக ஆட்சி அமைந்ததும், ஸ்டாலின் முதல்வரான பின் அவரது தலைமையில் சட்டசபைக்கு வருவோம்.அதுவரை சட்டசபையை முழுவதுமாக புறக்கணிக்கிறோம் என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button