மழைக்காலத்துல.. உங்க பார்ட்னருக்கு செக்ஸ் தேவை அதிகரிக்கிறதா? ஒரே ஒரு விஷயம் மட்டும் செஞ்சா போதும்..!

மழைக்காலங்களில் பாலியல் தேவை அதிகரிப்பதற்கு உளவியல் ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், நம் உடலில் ஏற்படும்...
rainy days
rainy days
Published on
Updated on
2 min read

இணையரிடையே பாலியல் ரீதியான உரையாடல்களும், நெருக்கமும் மிக அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனால்தான் பண்டைய தமிழ் கலாச்சாரத்தில், நிலங்களும் அதில் நிலவும் சூழல்களுக்கு ஏற்ப காதல் உணர்வு மாறுபடும் என திணைகளாக பிரித்து வைத்திருந்தனர்.

ஆகையால்தான் காதலும் காமமும் பிரிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. நீங்கள் உடலுறவை முறையாகக் கையாண்டால் நிறைய ஆரோக்கிய பலன்களை பெறலாம் என்பது உங்களுக்கு தெரியுமா!? ஆம்… முறையான பாதுகாப்பான உடலுறவின் மூலம் நிறைய ஆரோக்கிய பலன்கள் உண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், தொடர்ந்து உடலுறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தை பாதிக்காதா? என்ற கேள்வி எழுதுவது பொதுவான ஒன்றுதான். 

ஆனால் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் உடலுறவு கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துமே தவிர சீர்குலைக்காது.  ஆனால் கால நிலை மாற்றம் பாலியல் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை ஒவ்வொரு இணையரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

மழைக்காலங்களில்  பாலியல் தேவை அதிகரிப்பதற்கு உளவியல் ரீதியாக பல காரணங்கள் இருந்தாலும், நம் உடலில் ஏற்படும் ஹார்மோன்களின் விளையாட்டுகளாலாலும் பாலியல் தேவை அதிகரிக்கிறது.

பொதுவாக மழைக்காலங்களில் சூரிய ஒளி குறைவதால், நமது உடலில் உள்ள melatonin அதிக அளவு சுரக்க  துவங்குகிறது. இதுதான் நமது உடலின் தூக்கம் ஹார்மோன் ஆகும், மழைக்காலங்களில் ஒரு கதகதப்பான, மேலும்  மந்தமான நிலைக்கு நமது உடலையும் மனதையும் இந்த ஹார்மோன் தள்ளிவிடும். அதனால்தான் மழைக்காலங்களில் இயல்பாகவே கதகதப்பை நமது உடலும் மனமும் தேடுகிறது. 

அதன் விளைவாகவே நமது உடலில் அட்ரினல் வேகெமெடுத்து காம உணர்வு பெருக்கெடுக்கிறது. எப்படி ருசியான உணவை, பிடித்த காட்சிகளை, பார்க்கும்போது ஒரு ஆவலும் தேவையும் ஏற்படுகிறதோ, அதே போலத்தானே காம உணர்வும். அதை தவறான கண்ண்னோட்டத்தோடு பார்க்க தேவையில்லை.

செய்ய வேண்டியது என்ன!?

இந்த நேரத்தில்தான் உங்கள் இணையருக்கு உங்களின் தேவை மிக அதிகமாக இருக்கும். இதை வெறும் காமம் சார்ந்த ஒன்றாக மட்டுமே புரிந்துகொள்ள வேண்டாம். உங்கள் உள்ளங்கையின் கத கதப்பு கூட அவர்களை நிறைவடைய செய்யலாம். முடிந்த அளவு உங்கள் துணையின் அருகிலே இருக்க முயலுங்கள்.

இம்மாதிரியான மழைக்காலங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து கதகதப்பான கம்பளிக்குள் புகுந்து நல்ல படங்களை பார்க்கலாம். இது உங்கள் காதல் வாழ்க்கையை இன்னும் இனிமையாகக்கூடும்.

சூடான உணவுகளை சேமித்து சாப்பிடுங்கள்

தொற்று அபாயமும் உண்டு!!

ஆனால் மழை கால  ஈரப்பதம் யோனி தொற்றுக்களை அதிகரிக்கும். இதனால் பெண்களின் அந்தரங்க உறுப்பில் அரிப்பு, எரிச்சல் ஏற்படலாம். 

சுகாதாரமான உடலுறவு மேற்கொள்ள அந்த இடத்தை வறட்சியாகவும், காற்றோட்டமாகவும் வைத்திருப்பது சிறந்தது.

வெளிப்புறத்தை பாதுகாப்பதை போல உடலின் உட்புறத்தையும் பாதுக்காக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள். அதிகளவிலான அசைவ, துரித உணவுகளை தவிர்த்திடுங்கள். ஏன்னெனில்  மழைக்காலங்களில் செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.

காற்றோட்டமான எளிதில் சுவாசிக்க கூடிய ஆடைகளை அணியுங்கள்.

உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் உங்கள் இணையரோடு இந்த மழைக்காலத்தை கழியுங்கள். கோடையிலும் உங்கள் காதல் ஒருபோதும் வாடாது.!!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com