

இப்போதெல்லாம் கம்ப்யூட்டரும், லேப்டாப்பும் தான் நம்ம வாழ்க்கையின் முக்கியமான கருவிகள். இதை உபயோகிப்பவர்கள் மத்தியில் ஒரு குழப்பம் எப்போதும் இருக்கும்: பயன்படுத்தாத நேரத்தில் கம்ப்யூட்டரை நிறுத்தி (Shut Down) வைக்கணுமா, இல்லன்னா அப்படியே ஆன்ல விட்டுடலாமா? இந்த கேள்விக்குப் பதில் சொன்னா, அது உங்களுடைய கரண்ட் பில், கம்ப்யூட்டரின் வேகம், ஏன், அதன் ஆயுள் என எல்லா விஷயத்திலயும் சம்பந்தப்பட்டிருக்கு. எது நமக்குச் சிறந்ததுனு இங்கே பார்ப்போம்.
கம்ப்யூட்டரை நிறுத்தாமல் விட்டால் என்ன நடக்கும்?
சில தொழில்நுட்ப ஆட்கள் என்ன சொல்றாங்கன்னா, கம்ப்யூட்டரை எப்போதும் ஓட விடுறதுதான் நல்லதுனு சொல்றாங்க. காரணம், கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணிட்டு, மறுபடியும் ஆன் பண்ணும்போது, உள்ளே இருக்கிற உதிரிபாகங்கள் திடீர்னு வெப்பநிலை மாற்றத்தைச் சந்திக்கும். இந்தச் சட்டுனு நடக்குற சூடு மாற்றம், கம்ப்யூட்டரின் மெல்லிய பாகங்களில் சின்னச் சின்ன விரிசல்களை ஏற்படுத்தலாம். ஆனா, கம்ப்யூட்டரை ஆன்லேயே விட்டா, அந்த உதிரிபாகங்களின் வெப்பநிலை ஒரே மாதிரி சீரா இருக்கும். இதனால கம்ப்யூட்டரோட ஆயுள் கூடும்னு சிலர் நம்புறாங்க. முக்கியமா, அடிக்கடி கம்ப்யூட்டரை ஆன் பண்ணி, ஆஃப் பண்ற நேரம் வேஸ்ட் ஆகாது இல்லையா?
ஆஃப் பண்ணினா பணம் மிச்சமாகுமா?
ஆனா, கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணி வைக்கிறதுல இருக்கிற பெரிய லாபம் என்னன்னா, அது மின்சாரச் செலவைக் குறைக்கும் என்பதுதான். ஒரு கம்ப்யூட்டர் நாள் முழுக்க ஓடினா, அது தொடர்ந்து கரண்ட்டை இழுத்துகிட்டே இருக்கும். இதனால உங்களுடைய மின் கட்டணம் கட்டாயம் அதிகமாகும். கம்ப்யூட்டரை Sleep Mode-ல் வச்சா, அது ரொம்பக் குறைவான கரண்ட்டைத்தான் இழுக்கும். ஆனா, முழுசா அணைச்சுட்டா கரண்ட் செலவு முற்றிலுமே ஜீரோ ஆகிடும். பணத்தைச் சேமிக்கவும், சுற்றுச்சுழலைக் காப்பாத்தவும், பயன்படுத்தாத நேரத்தில் கம்ப்யூட்டரை அணைச்சு வைக்கிறதுதான் ரொம்பச் சரியான வழி.
கம்ப்யூட்டர் ஏன் திடீர்னு ஸ்லோ ஆகுது?
கம்ப்யூட்டரின் வேகம் மற்றும் அதன் செயல்திறன்னு பார்த்தா, அதை அடிக்கடி Restart செய்வதுதான் ரொம்ப நல்லதுனு டெக் ஆட்கள் சொல்றாங்க. ஒரு கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்கும்போது, ரேம் (வேக நினைவகம்) போன்ற பகுதிகள்ல தேவையில்லாத தற்காலிகக் கோப்புகள் நிறைய சேர்ந்துடும். இதனாலதான், கொஞ்ச நாள்ல கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகுது. ஒரு முறை மறுதொடக்கம் செஞ்சா, இந்தத் தேவையில்லாத கோப்புகள் எல்லாம் நீக்கப்பட்டு, கம்ப்யூட்டர் மீண்டும் புது வேகத்துல இயங்க ஆரம்பிக்கும். புதுசா ஏதாவது ஒரு மென்பொருள் மாற்றம் வந்தாலும், மறுதொடக்கம் செய்வதுதான் அதைச் சரியாப் பொருத்த உதவும்.
நீங்க ஒரு நாளுக்குப் பல தடவை கம்ப்யூட்டரை யூஸ் பண்றவரா இருந்தா, அல்லது கொஞ்ச நேரம் மட்டும் யூஸ் பண்ணாம இருக்கப் போறீங்கன்னா, அதை Sleep Mode-ல் போட்டுட்டுப் போங்க. இது திரும்ப வந்து வேகமா வேலையைத் தொடங்க உதவும்.
இரண்டு நாளுக்கு மேல அல்லது இரவு முழுக்கப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், முற்றிலுமா அணைச்சு வைக்கிறதுதான் பணத்தை மிச்சப்படுத்தவும், கம்ப்யூட்டரின் மென்பொருள் சீராக இருக்கவும் ரொம்ப நல்லது. ஆகவே, கம்ப்யூட்டரை அணைக்கணுமா, ஆன்ல விடணுமாங்கிறது, நீங்க அதை எவ்வளவு இடைவெளியில் பயன்படுத்துறீங்க என்பதைப் பொறுத்துதான் இருக்கு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.