கிரைம்

இனிப்பு வாங்க 5 ரூபாய் கேட்ட மனைவி… கோபத்தில் குழந்தையை கொன்ற கணவன்…

மகாராஷ்டிராவில் 5 ரூபாய்க்காக ஒன்றரை வயது குழந்தை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் லொனாரா என்ற கிராமத்தில் விவேக் உய்கே என்ற நபர் தனது மனைவி மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் வசித்து வருகிறார். இதனிடையே சம்பவத்தினத்தன்று கோதுமையில் செய்யப்பட்ட கஜா என்ற இனிப்பைக் கேட்டு குழந்தை அழுதுள்ளது.

அப்போது வேலை முடிந்து வீட்டிற்கு வந்த கணவன் விவேக்கிடம் மனைவி 5 ரூபாய் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் இல்லை என விவேக் கூற இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவி மற்றும் குழந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

உடனடியாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விவேக்கை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

2 Comments

  1. I would like to thank you for the efforts you have put in writing this website. I am hoping the same high-grade site post from you in the upcoming as well. In fact your creative writing abilities has inspired me to get my own web site now. Actually the blogging is spreading its wings rapidly. Your write up is a great example of it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button