தமிழ்நாடு

கடலுக்கடியில் பரவிக் கிடக்கும் முகக் கவசங்கள்…பொதுமக்களின் அஜாக்கிரதையால் ஏற்படும் ஆபத்து

புதுச்சேரியில் பொதுமக்கள் பயன்படுத்திய முகக் கவசங்கள் கடலுக்கடியில் பரவிக் கிடப்பதாக ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரான அரவிந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் மக்கள் வீடுகளில் முடங்கியதால், காற்று, நீர் நிலைகள் மாசுபாடு அடைவது குறைந்து காணப்பட்டது. புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி நடத்தி வரும் அரவிந்த் என்பவர் கொரோனா நேரத்தில் ஆழ்கடலில் சென்று அப்பகுதி தூய்மையாக இருந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட நிவர் புயல், மழை போன்ற பாதிப்புகளுக்கு பின்னர் கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை காண அவர் மீண்டும் சென்ற அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் மக்கள் அணிந்திருந்த முகக்கவசங்கள் கடலுக்கடியில் பரவி கிடந்தது.

முறையாக அப்புறப்படுத்தாமல் விட்ட முகக்கவசங்கள் மழையால் கால்வாயில் விழுந்து அவை கடலுக்குள் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவற்றில் சிலவற்றை அவர் கையோடு எடுத்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.  எனவே பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களை முறையாக அப்புறப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button