இணையத்தில் வெளியான மாஸ்டர் படம்…. லீக் செய்த நபரை பிடித்துக்கொடுத்த ட்விட்டர் நிறுவனம்…

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானதால் படக்குழுவினர், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் வெளியீடாக நாளை திரைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவுகள் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், இணையவாசிகளிடம் படக்காட்சிகளை யாரிடமும் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து படத்தின் காப்பியானது யார் யாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற ரீதியில் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான டிஜிட்டல் நிறுவனம் ஒன்றிடம் திரைப்படத்தின் காப்பி கொடுக்கப்பட்டதாகவும், அதில் பணிபுரியும் நபர் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்து வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் மீது காவல்துறையில் புகாரளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் படக்குழுவினருக்கு ட்விட்டர் நிறுவனம் உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.