பொழுதுபோக்கு

வெளியானது மாஸ்டர் திரைப்படம்… தியேட்டர்களில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்….

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் ரிலீசாகியுள்ளதை முன்னிட்டு தியேட்டர்கள் மீண்டும் களைக்கட்ட தொடங்கியுள்ளது.

நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி, நடிகை மாளவிகா மோகனன் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் மாஸ்டர். இப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 13 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே நேற்று முன்தினம், படத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியானதால்  படக்குழுவினர், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

Image

இந்நிலையில் மாஸ்டர் படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் மாஸ்டர் படம் திரையிடப்பட்டுள்ளது. நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்களில் குவிய தொடங்கினர். டிஜே டான்ஸ், செண்டை மேளம், பட்டாசு வெடிக்க அவர்கள் மாஸ்டர் படத்துக்கு சிறப்பான வரவேற்பளித்தனர்.

50% இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதியளித்த நிலையில் இன்று முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளது. மீண்டும் ரசிகர்கள் படையெடுப்பால் தியேட்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button