Scoop Newsபொழுதுபோக்கு

இன்னைக்கு ட்ரெண்டிங் இதுதான் #MasterOnlyOnTheaters..பட ரிலீஸ்ல என்னதான் பிரச்சனை? முழு விவரம்

மாஸ்டர் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு தியேட்டரில் தான் வெளியாகும் என்று படக்குழுவினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தல,தளபதி நடித்த படங்கள் ரிலீஸ் தேதி என்றால் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் தான்.அதிலும் நடிகர் அஜித் வருடத்திற்கு ஒரு படம் நடித்தாலும் தனது ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் எண்ட்ரியை கொடுத்து விடுவார்.ஆனால் நடிகர் விஜய் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் கூட நடிப்பார்.அந்த வகையில் இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’மாஸ்டர்’ படத்தில் நடிக்க விஜய் முடிவு செய்தார்.மற்றொரு மாஸ் ஹீரோவான நடிகர் விஜய் சேதுபதியும் இப்பட்டத்தில் நடிக்க ஒப்புக்கொணடார்.எனவே இந்த ஆண்டு தொடக்கத்திலேயே படப்பிடிப்பை ’மாஸ்டர்’ படக்குழு தொடங்கியது.ரசிகர்களும் படத்தின் ரிலீஸ் தேதிக்காக ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர்.

இதனை தொடர்ந்து படம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது.ஆனால் யாரும் எதிர்பார்க்காத கொரோனா ஊரடங்கால் ‘மாஸ்டர்’திரைப்படத்தை முடிவு செய்த தேதியில் வெளியிடமுடியவில்லை.இதனால் கொந்தளித்த ரசிகர்கள், ’ப்ளீஸ் மாஸ்டர் படத்தின் டீசரையாவது தீபாவளிக்கு வெளியிடுங்க’என்று கேட்டுக்கொண்டனர்.

இதனை மனதில் வைத்துக்கொண்டு தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.டீசரும் வெளியான 24 மணி நேரத்திற்குள் மில்லியன் பார்வையாளர்களை பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் மாஸ்டர் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகப்போகிறதா, இல்ல நேரடியாக திரையரங்குகளில் வெளியாகுமா என ரசிகர்கள் குழம்பு போய் இருந்தனர்.இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை பிரபல ஓடிடி தளமான netflix கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் படக்குழுவினரிடம் பல கேள்விகளை கேட்டு வந்தனர்.

தற்போது அந்த கேள்விகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக’ மாஸ்டர் திரைப்படம் கண்டிப்பாக பொங்கலுக்கு திரையரங்குகளில் தான் வெளியாகும்.அதற்கு அடுத்தப்படியாக தான் ஓடிடி தளம்.அதுவும் netflix இல்லை amazon prime தான்’ என்றுபடக்குழுவினர் உறுதியாக தெரிவித்துள்ளனர்.இந்த செய்தியை கேட்டு உற்சாகம் அடைந்த ரசிகர்கள் #MasterOnlyOnTheaters என்ற ஹேஸ்டேக்-ஐ ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button