பொழுதுபோக்கு

தொடங்கியது மாஸ்டர் டிக்கெட் முன்பதிவு… மாஸ்க் அணியாமல் குவிந்த ரசிகர்கள்…

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படமும், 14 ஆம் தேதி சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படமும் ரிலீசாகிறது. கொரோனாவுக்கு பிறகு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இதற்காக ரசிகர்கள் பலரும் ஆன்லைன் மூலமும், தியேட்டர்களில் நேரடியாகவும் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதில் பல இடங்களில் ரசிகர்கள் கொரோனா தொற்றை பொருட்படுத்தாமல் மாஸ்க் இன்றி சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button