தமிழ்நாடு

“இந்த ஆட்சி எவ்வளவு கேவலமா போகுது – சிந்திச்சி பாருங்க” …. திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் தொண்டர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் உள்ள ஆட்சி எவ்வளவு கேவலமாக உள்ளது என ஆளுங்கட்சி அமைச்சரே மேடையில் பேசியது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு 2500 ரூபாய் வழங்குவதற்கு தடைகேட்டு எதிர்கட்சியினர் நீதிமன்றம் சென்றனர்.

ஆனால் அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்த நிலையில் நாம் மகிழ்ச்சியாக பொங்கல் பரிசு பெற்றோம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆட்சி எவ்வளவு கேவலமாக இருக்கிறது? எவ்வளவு அசிங்கமாக போகிறது?  என்பதை சிந்தித்துப் பாருங்கள் என கூற ஒருகணம் சுற்றியிருந்த அதிமுகவினரே அதிர்ச்சியடைந்தனர்.

திமுகவை விமர்சிப்பதாக நினைத்து ஆளும் கட்சியை பற்றி கருத்து தெரிவித்த அமைச்சரின் பேச்சு கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இயேசுவை சுட்டது கோட்சே, திருக்குறளை எழுதியது அவ்வையார் என உளறிக் கொட்டியதுனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

15 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button