தமிழ்நாடு

தினமும் ஒரு டம்ளர் ரசம் குடியுங்கள்… கொரோனா காணாமல் போய்விடும்… அமைச்சரின் அதிரடி பேச்சு

தினமும் ஒரு டம்ளர் ரசம் குடித்தால் கொரோனா காணாமல் போய்விடும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி பகுதியில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது தினமும் உணவில் ரசம் சேர்த்து கொள்ளுங்கள். அல்லது ஒரு டம்ளர் ரசம் குடியுங்கள் கொரோனா உள்ளிட்ட நோய்கள் எல்லாம் ஓடிப்போய் விடும் என கூறினார்.

மேலும் தான் தினமும் சுக்கு ரசம், மிளகு ரசம் குடிப்பதாகவும், இதிலுள்ள பொருட்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாகவும் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதையும் தாண்டி ஏதாவது ஏற்பட்டாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button