பிறக்கும் குழந்தையின் தலையில் 62 ஆயிரம் ரூபாய் கடன்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் தலையில் 62 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டு மக்களின் நலனை புறக்கணித்து, தம்மையும் தமது பினாமிகளையும் வளப்படுத்திக் கொள்வதற்காகவே கடன் வாங்கி, தமிழக மக்களின் தலையில் 5.70 லட்சம் கோடி ரூபாய் கடனைச் சுமத்தியுள்ள முதலமைச்சர் பழனிசாமி மற்றும் நிதியமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு, திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், வருமானத்திற்கு மீறிய சொத்துக்குவிப்பு புகாருக்கு உள்ளாகியுள்ள நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் பழனிசாமியும் மிக மோசமான நிதி நிர்வாகத்தைக் கையாண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், 2006 – 2011 திமுக ஆட்சியில் 44 ஆயிரத்து 84 கோடி ரூபாய் மட்டுமே கடன் வாங்கியதாகவும், தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் 3.55 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் 10.5 % ஆக இருந்த வருமானம், அதிமுக ஆட்சியில் 7.2% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பணத்தில் விளம்பரங்கள் வழங்குவதிலும் ஊழல் செய்துள்ள முதல்வர், தேர்தலுக்கு முன் பணிகளை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்று நன்கு அறிந்திருந்தும் கூட, கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள டெண்டர்களை விடுத்து, அரசு கஜானாவை காலி செய்துள்ளார் என பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ள ஸ்டாலின், இதன் காரணமாக திமுக இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணித்ததாக விளக்கம் அளித்துள்ளார்.
I pay a quick visit day-to-day some blogs and information sites to read articles or reviews, however this blog offers quality based content.
tadalafil 40 mg daily: http://tadalafilonline20.com/ tadalafil 40 mg from india
tadalafil dosage tadalafil
tadalafil online