தமிழ்நாடுதிருச்சி

விவசாயத்தில் நட்டம் ஏற்பட்டதால் தாய் – மகன் தற்கொலை !

திருச்சி அருகே தாய், மகன் தற்கொலை செய்து கொண்டசம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நச்சுலூர் பகுதியை சேர்ந்தவர் செல்லம்மா. இவர் தனது மகன் ரமேஷ் பாபுவுடன் பெரியார் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக இவர்களின் வீடு உள்புறம் சாத்தப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர ஜன்னல் வழியே பார்த்த போது இறந்த நிலையில் செல்லம்மா மற்றும் ரமேஷ் பாபுவின் உடல் கிடந்துள்ளது.

தகவலை அடுத்து சம்பவ இடத்தற்கு வந்த காவல் துறையினர் உடல்களை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு போலீசார் நடத்திய விசாரணையில் செல்லம்மா வாழை விவசாயம் மேற்கொண்டு வந்ததாகவும் அதில் நட்டம் ஏற்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button