Scoop News

இந்து பெண்ணுக்கு முஸ்லீம் வாரிசா? கருக்கலைப்பு செய்த உ.பி. பாஜக அரசு!?

யோகி ஆதித்யா நாத் அரசின் சர்ச்சைக்குரிய சட்டத்தால் விபரீதம்!

முஸ்லீம் இளைஞரை திருமணம் செய்த இந்து பெண், 3 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று உத்தரப்பிரதேச அரசு அதிகாரிகள் கருச்சிதைவு செய்ததாக, தி டெலிகிராப் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தை சேர்ந்த, ரஷீத் என்ற 27 வயது இளைஞரும்,பிங்கி என்ற 22 வயது பெண்ணும் காதலித்து வந்த நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.

கடும் எதிர்ப்புக்கு பிறகு, ரஷிதின் குடும்பத்தினர், இந்த திருமணத்தை ஏற்று, பிங்கியை தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் பிங்கி 3 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த பாஜகவின் துணை அமைப்பான பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள், ரஷீதின் வீட்டிற்கு காவல்துறையுடன் வந்துள்ளனர். அங்கு பிங்கியை கைது செய்து, அரசு காப்பகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ரஷித்தை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், சில நாட்களுக்கு பிறகு, தனது மாமியாரை காப்பகத்தில் சந்தித்த, பிங்கி, தான் 3 மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், ரத்தப் போக்கு ஏற்பட்டு, கர்ப்பம் கலைந்து விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். காப்பகத்தில் தனக்கு ஊசி ஒன்றை போட்டதாகவும், அதில் கர்ப்பம் கலைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது ரஷீதின் குடும்பத்தினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யாநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்து வரும் நிலையில், அண்மையில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள், இந்து பெண்களை திருமணம் செய்ய தடை விதித்து, சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக ஆட்சி செய்யும் மேலும் சில மாநிலங்களிலும் இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இந்த சட்டத்தின் அடிப்படையிலேயே உத்தரப்பிரதேச அரசு கடந்த சில வாரங்களில் 10க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்துள்ளது. அண்மையில் அலிகாரில், காதல் திருமணம் செய்து கொண்ட, முஸ்லீம் இளைஞரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து பாஜகவினர் தாக்கிய நிலையில், அவரது மனைவியை பெண் போலீசார் இழுத்துச் சென்றனர். அப்போது, அந்த பெண் தனக்கு 18 வயது ஆகிவிட்டது, தான் மேஜர், எனது கணவரை என்னோடு அனுப்பி வையுங்கள் என கதறி அழுததது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

உத்தரப்பிரதேச அரசின் இந்த சர்ச்சைக்குரிய சட்டத்தின் மூலம் தொடர்ந்து அப்பாவிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதே நேரம் பிங்கி விவகாரத்தில், அவரது கரு கலையவில்லை என்றும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரம் மத மாறி திருணம் செய்து கொண்ட வழக்கில் பிங்கியின் கணவரும், அவரது சகோதரரும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

One Comment

  1. This is the right blog for anyone who wants to find out about this topic. You realize so much its almost hard to argue with you (not that I actually would want…HaHa). You definitely put a new spin on a topic thats been written about for years. Great stuff, just great!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button