உலகம்

இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் கட்டப்படும் முள்ளிவாய்க்கால் நினைவிடம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் மீண்டும் கட்டப்படும் என அப்பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையை நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்தூபி அமைக்கப்பட்டது. இது சில் தினங்களுக்கு முன் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள், தமிழ் தேசிய அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக  மாணவர்களும் அங்கு தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் இடிக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் நினைவிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மாணவர்கள், அரசின் கோரிக்கையை ஏற்று நினைவிடம் அமைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குண ராஜன்  தெரிவித்துள்ளார். இதற்கு  வரவேற்பு தெரிவித்துள்ள மாணவர்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button