தமிழ்நாடு

வேல் ஏந்தி புறப்பட்ட முருகன் – கயறு கட்டி தடுத்து நிறுத்திய போலீஸ் ;

தடையை மீறி வேல் யாத்திரைக்காக பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருத்தணி நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தமிழக பாஜக சார்பில் நவம்பர் 6ஆம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் வேல் யாத்திரையை முடிக்க பாஜக திட்டமிட்டு இருந்தது.

இதனிடையே பாஜகவின் வேல் யாத்திரையால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.

இந்நிலையில் இன்று காலை திட்டமிட்டபடி வேல் யாத்திரையை தொடங்க உள்ளதாக அறிவித்த எல்.முருகன், கைகளில் வேலை ஏந்தியபடி காரில் திருத்தணி நோக்கி புறப்பட்டார். இதனிடையே பூந்தமல்லியில் அவர் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

கயிறுகள் மூலம் பாஜகவினரின் வாகனங்களை போலீசார் தடுத்தனர்.  இதனையடுத்து 5 வாகனங்களுடன் திருத்தணி நோக்கி சேல்ல அவர் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் போலீசார் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து 5 கார்களுடன் திருத்தணி நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கே அவரை தடுத்து நிறுத்தி கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button