செய்திகள்விளையாட்டு

இந்திய அணியில் “யார்க்கர்” நடராஜன்… மண்ணின் மைந்தருக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹைதரபாத் அணியில் சேலத்தைச் சேர்ந்த நடராஜன் இடம் பெற்று விளையாடினார். ஒரு ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கராக வீசும் அவரின் அபார திறமை கண்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் வாயைப் பிளந்தது. ஐபிஎல்லில் பல முன்னணி பேட்ஸ்மேன்கள் இவரது பந்துவீச்சில் அவுட்டாயினர்.

இந்நிலையில் ஆஸி. எதிராக டிசம்பரில் நடைபெற உள்ள தொடரில் இந்திய அணியுடன் நடராஜன் பயணிப்பார் என அறிவிக்கப்பட்டது. அவரது பெயர்  அணியில் இடம் பெறவில்லை. ஆனால் அவருக்கு ஆடும் லெவன் அணியின் இடம் கொடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் டி20 அணியில் சேர்க்கப்பட்ட வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலக, அந்த வாய்ப்பு நடராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்!’ என தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button