அரசியல்கவர் ஸ்டோரிதமிழ்நாடு

தமிழகத்தில் இந்தாண்டு வெறும் 8 மாணவர்கள் தான் மருத்துவ படிப்பில் சேர முடியுமா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!

இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளிலிருந்து வெறும் 8 மாணவர்கள் மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும் என்கிற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. நீட் தேர்வு வந்த பின் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியவில்லை என்று ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகையில் அவர்கள் கூறுவது உண்மை என்பது டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில கட்டுரையின் மூலம் தெரியவந்துள்ளது.

அந்த கட்டுரையில் வந்த தகவல் மூலம் கடந்த 2019-20 ஆண்டுக்கான நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளை சேர்ந்த வெறும் 32 மாணவர்களே 300க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர் என்றும் அதில் 2 மாணவர்களுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைத்திருக்கிறது என்கிற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதே போல இந்தாண்டு 89 மாணவர்கள் 300க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

அதேபோல அரசு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற அரசு உதவி பெரும் பள்ளிகளில் படித்த 4 மாணவர்கள் தான் 500 மதிப்பெண்களுக்கும் மேல் பெற்றிருக்கிறார்கள். OBC ஒதுக்கீட்டின் 2 மாணவர்களும்,இரு மாற்று திறனாளி மாணவர்கள் என மொத்தம் 8 நபர்களுக்கு தான் இந்தாண்டு மருத்துவ இடம் கிடைக்கும்.அதுவும் உறுதியாக கூறமுடியாத நிலை இருக்கிறது.

இங்கு பலர் நினைப்பது போல நீட் தேர்வில் பாஸ் ஆனாலே மருத்துவ இடம் கிடைத்துவிடாது. எப்படி ஒருவர் 12ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியுமோ அதே போல தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுதல் என்பது மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஏற்படும் தகுதி மட்டுமே. அதேபோல முன்பு எப்படி தனியார் ஒதுக்கீட்டு இடங்களில் லட்சங்கள் செலவு செய்து இடம் பிடிக்க முடியுமோ இப்போதும் அதே நிலை தான் இருக்கிறது.

Related Articles

12 Comments

  1. Hello! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the post I realized it’s new to me. Anyways, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back frequently!

  2. Hello! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the post I realized it’s new to me. Anyways, I’m definitely happy I found it and I’ll be book-marking and checking back frequently!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button