இந்தியா

புதிய கல்வி கொள்கை; மத்திய அரசு புதிய அறிவிப்பு!

புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள் இன்று முதல் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை, கடந்த ஜூலை 29ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அதில், அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, எம்.பில் படிப்புகள் ரத்து உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு மக்கள் தரப்பில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.இந்நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநில பள்ளி கல்வி செயலர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. அதில், இன்றுமுதல், ஆகஸ்ட் 31ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்காக, innovate india என்ற இணையதள பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button