டிக்டாக் செயலிக்கு மாற்றாக களமிறங்கும் புது செயலி…தயாரா இருங்க…!

பேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு மாற்றாக புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு வரை கோடிக்கணக்கான பயனாளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட செயலியான டிக்டாக், சீன செயலிகள் மீதான தடையால் இந்தியாவில் செயல்படாமல் போனது. இருந்தாலும் அதனை மீண்டும் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
டிக்டாக் செயலியால் பிரபலமானவர்கள், விபரீத விளையாட்டால் உயிரிழந்தவர்கள் என இதற்கும் இருபக்கங்கள் உண்டு என்றாலும் அனைவரது விருப்பமான செயலியாக டிக்டாக் இருந்து வந்தது. டிக்டாக் மீதான தடையை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் Collab என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது அமெரிக்காவில் iOS பயனாளர்களின் பீட்டா வெர்ஷனில் மட்டுமே செயல்படும் இந்த செயலி 2021 ஆம் ஆண்டு முதல் அனைவரது பயன்பாட்டுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே டிக்டாக்கிற்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் தனது செயலிகளில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ என்ற வீடியோ பதிவிடும் வசதியை உருவாக்கியது.
ஆனால் இது டிக்டாக் அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. ரீல்ஸில் இடம் பெறும் 15 நொடிகள் கொண்ட வீடியோ பதிவிடும் முறையே Collab செயலியிலும் இருக்கும் என கூறப்படுகிறது.
Hi, i read your blog occasionally and i own a similar one and i was just curious if you get a lot of spam comments? If so how do you stop it, any plugin or anything you can recommend? I get so much lately it’s driving me crazy so any help is very much appreciated.