மத்திய பல்கலைக்கழகங்களுக்கு ஒரே பொது நுழைவு தேர்வு.! -மத்திய அரசின் அடுத்த அறிவிப்பு. !

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அனைத்து வகையான படிப்புகளுக்கும் பொது நுழைவு தேர்வை அறிவித்துவருகிறது. அதன் படி மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வை அறிவித்த நிலையில் தற்போது நாடு முழுவதும் இருக்கும் மத்திய பலக்லைக்கழகங்களுக்கும் பொது நுழைவு தேர்வு திட்டத்தை அறிவித்துள்ளது.

மத்திய அரசு நடத்தும் மத்திய பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் இயங்கிவருகின்றன. இந்தியா முழுவதும் 41 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைகழகங்களில் இளங்கலை, முதுகலை, முனைவர் படிப்புகளுக்கு பல்கலைகழக அளவிலான நுழைவு தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வந்தது. இப்போது அந்த அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே நுழைவு தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடப்பு ஆண்டிலேயே தொடங்கும் இந்த பொது நுழைவு தேர்வு தொடர்பான அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் இந்த மாத இறுதியில் வெளியாகும் என்றும், ஜூன் இறுதியில் நுழைவு தேர்வு நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வழக்கம் போல எதிர்ப்புகளும் கிளம்பியுள்ள.

Back to top button