மத்திய அரசு வேலை… மாச சம்பளம் ரூ.1,25,000 லட்சமா… அதுவும் உள்ளூரிலேயேயா? மிஸ்பண்ணிடாதீங்க..

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள ஆலோசகர், மூத்த ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1.25 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குக் கல்வித் தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விபரங்களைக் காணலாம் வாங்க.

காலி பணியிடங்கள் : Young Professional – 08, ஆலோசகர் – 02, மூத்த ஆலோசகர் – 02 என மொத்தம் 12 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.

விண்ணப்பிக்க வயது வரம்பு… Young Professional பணிக்கு 35 வயதிற்கு உட்பட்டும்,
ஆலோசகர் பணிக்கு 50 வயதிற்கு உட்பட்டும்.
மூத்த ஆலோசகர் பணிக்கு 58 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கல்வித் தகுதி: LLB/ CA/ ICWA/ PG Diploma/ MBA அல்லது ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பதவிக்கு ஏற்ப குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NHDC மாச சம்பளம்: ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1.25 லட்சம் வரை.
Young Professional பணிக்கு ரூ.50,000 சம்பளம்.
ஆலோசகர் பணிக்கு ரூ.80,000 சம்பளம்.
மூத்த ஆலோசகர் பணிக்கு ரூ.1,25,000 லட்சம் சம்பளம்

விண்ணப்பிக்கும் முறை: NHDC பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://nhdc.org.in/upload/NHDC_Vacancy_Circular_for_Website31032021.pdf எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் nhdc.org.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 20.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பம் – இங்கே கிளிக் செய்யவும் https://nhdc.org.in/ApplicationForm2.aspx

Back to top button