அறிமுகமானது ஆப்பிளின் புதிய ‘ஐபேட் ப்ரோ’மாடல்…

லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளேயுடன் ஆப்பிள் நிறுவனம் தனது புது ஐபேட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சார்பில் நேற்று நடைபெற்ற ஸ்ப்ரிங் லோடெட் நிகழ்வில், அந்நிறுவனத்தின் புது சேவைகள் மற்றும் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த 5ஜி வசதியுடன் கூடிய ஐபேட் ப்ரோ 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு கேமரா வசதியுடன் அறிமுகம் ஆகியுள்ளது.

இதில் 5ஜி கனெக்டிவிட்டி, லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதன் டிஸ்ப்ளேவில் மினி OLED இடம்பெற்றுள்ளது. 11 இன்ச் மற்றும் 12.9 இன்ச் என இருவித அளவுகளில் கிடைக்கும் புது ஐபேட் ப்ரோ தண்டர்போல்ட், மல்டி டச், டால்பி அட்மோஸ் ஆடியோ, ஆப்பிள் பென்சில் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் டூயல் பிரைமரி கேமராக்களும் இடம்பெற்றுள்ளன.

ஐபேட்டின் மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 16 GB RAM மற்றும் 2 GB வரையிலான ROM வழங்கப்படுகிறது. இத்துடன் LIDAR scanner வைபை 6, பேஸ் ஐடி, நான்கு ஸ்பீக்கர் ஆடியோ வசதி, நாள் முழுக்க நீடிக்கும் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய 11 இன்ச் ஐபேட் ப்ரோ விலை 799 டாலர்கள் என்றும் 12.9 இன்ச் மாடல் விலை 1099 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதனை ஏப்ரல் 30ம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஐபேட் ப்ரோ வருகிற மே மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Back to top button