ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ‘AIR Tags’ அறிமுகம்

சாவி, பென்டிரைவ், லக்கேஜ் பேக்குகள் உள்ளிட்ட பொருட்களின் இருப்பிடத்தை ஜிபிஆர்எஸ் கருவி உதவியுடன் கண்டுபிடிக்கும் ‘கீ செயின்’ வடிவிலான Air Tags-ஐ தற்போது ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் நேற்றிரவு ‘ஸ்ப்ரிங் லோடெட்’ நிகழ்வில் பல்வேறு புது சேவைகள் மற்றும் சாதனங்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டது. விர்ச்சுவல் மோட் வழியாக நடந்த இந்த அறிமுக நிகழ்ச்சியில் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், புதிய மாடல் ஐபேட், ஐமேக், ஏர் டேக் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து ஆப்பிள் பாட்காஸ்ட் செயலி பற்றியும் அதன் புதிய தோற்றத்தையும் அறிமுகம் செய்து அதுதொடர்பான தகவல்களை வெளியிட்டார்.

மேலும் புது யுஐ கொண்டிருக்கும் பாட்காஸ்ட் செயலியுடன் பாட்காஸ்ட் சந்தா எனும் புது சேவையும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது பாட்காஸ்ட் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார். இத்துடன் ஆப்பிள் பைண்ட் மை சர்வீஸ் பற்றியும் டிம் குக் தெரிவித்துள்ளார்.

இத்துடன் ஆப்பிள் ‘ஏர் டேக்ஸ்’ எனும் புது சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனர்களின் பொருட்கள் காணாமல் போனால் அவற்றை கண்டறியும் வைகையில் அதனுள் UI சிப் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது ஆப்பிளின் மற்ற சாதனங்களை போன்றே பயனர் விவரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏர் டேக்ஸ் ஐபோன் மற்றும் ஐபோடு டச் மூலமாக செயல்படுத்த முடியும் என டிம் குக் தெரிவித்துள்ளார்.

Back to top button