அதானி குழுமத்துடன் இணைந்த ஃப்ளிப்கார்ட்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதானி குழுமத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் தனது உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், தனது சேவையை விரிவுப்படுத்தவும் முடிவு செய்துள்ளது. அதன்படி  ஃப்ளிப்கார்ட்டுடன் கைக்கோர்த்துள்ள அதானி குழுமம் முக்கிய நகரங்களில் சரக்கு மற்றும் டெலிவரி சேவை மையங்களை உருவாக்க உள்ளது.

இதனால் ஆர்டர் செய்யும் பொருட்கள் விரைவாக டெலிவரி செய்யப்படும் என்றும்,மும்பையில் 5,34,000 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் லாஜிஸ்டிக்ஸ் கட்டடம் ஃபிளிப்கார்ட்டின் சேவைக்கு ஒதுக்கப்படவுள்ளது. மேலும் இது 2022 மூன்றாம் காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button