வெளியேறுகிறது எல்ஜி நிறுவனம் – அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட டிஜிட்டல் உலகில் தினம் தினம் புதுபுது அப்டேட்டுகளுடன் எலக்ட்ரானிக்ஸ், மொபைல் நிறுவனங்கள் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளது.இதனிடையே எல்ஜி  நிறுவனம்  ஸ்மார்ட்போன் சந்தையிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 751 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்துள்ளது. எல்ஜியின் மொபைல் துறையை வாங்க கூகுள், பேஸ்புக், வோக்ஸ்வேகன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின.

ஆனால் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படாததால் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது. அதேசமயம் இந்தாண்டு இறுதியில்  மடிக்கும் வகையிலான ரோலபில் ஸ்மார்ட்போனை  வெளியிட எல்ஜி திட்டமிட்டு வருகிறது. புதுபுது முயற்சிகளை கையிலெடுத்து வெற்றி பெற்ற எல்ஜியின் இந்த முடிவு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.