ஆன்லைன் பணபரிவர்த்தனையில் களமிறங்கும் “ஒன்பிளஸ் நிறுவனம்”

ஆன்லைன் பணபரிவர்த்தனையில் ஒன்பிளஸ் நிறுவனம் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதிகளை அனைத்து வங்கிகளும் ஏற்படுத்திக் கொடுத்தது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த வசதியாக அமைந்தது என்றே சொல்லலாம். இதனால்  டிஜிட்டல் பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தியாவில் கூகுள்பே, போன் பே, பேடிஎம், வாட்ஸ்அப் பே ஆகியவை பயன்பாட்டுக்கு வந்தன.

இந்நிலையில் இந்த சேவையில் ஒன்பிளஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. இதன் அதிகாரப்பூர்வமான சான்றிதழ் பற்றிய தகவல்கள் சமீபத்தில் ட்விட்டரில் வெளியாகியது. இந்த சேவையில் தனித்துவமான முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Back to top button