அதிகரிக்கும் பெட்ரோல் விலை… மின்சார வாகனங்கள் வாங்க மக்கள் ஆர்வம்…

தமிழகத்தில்  மின்சார வாகனங்கள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில்  பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து மாற்று எரிசக்தி மூலம் வாகனங்களை இயக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

குறிப்பாக மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மின்சார வாகனங்களை வாங்க பொதுமக்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 மாநிலங்களில் 9,567 மின்சார வாகனங்கள் விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button