சோகத்தில் PUBG பிரியர்கள்… ஏப்ரல் 29 ஆம் தேதி இருக்குது ஆப்பு…

ஏப்ரல் கடைசியில் இருந்து PUBG LITE  செயல்படாது என்ற அறிவிப்பால் பயனாளர்கள் சோகத்தில் உள்ளனர்.

இந்தியாவில் 3 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டிருந்த சீன செயலியான பப்ஜி செயலி இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி கடந்தாண்டு மத்திய அரசு தடை விதித்தது. அதேசமயம் RAM வசதி குறைவாக உள்ள மொபைல்களுக்கு PUBG LITE செயலி 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இதனிடையே PUBG LITE செயலி ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் PUBG மற்றும் PUBG LITE செயலி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளில் உள்ள பயனாளர்களை கொண்டு அந்நிறுவனம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.