உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம்… நெட்வொர்க்கை சந்தேகித்த பயனாளர்கள்…

உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவை திடீரென முடங்கியதால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்க சமூக வலைத்தள செயலிகள் பெரிதும் பயன்படுகின்றன. இதனால் தகவல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றம் நாளுக்கு நாள் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

சமூக வலைத்தள செயலிகளான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பல செயலிகளை பயன்படுத்தாத மக்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தளவுக்கு கோடிக்கணக்கான மக்கள் இதனை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் சேவை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது.முதலில் இணையச் சேவை தான் பாதிக்கப்பட்டதாக நினைத்த பயனாளர்கள் பலரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை திட்டித் தீர்க்க தொடங்கினர்.

ஆனால் சர்வரில் ஏற்பட்ட பிரச்சனையே இதற்கு காரணம் என தெரிந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒருமணி நேரத்திற்குப் பிறகு நிலைமை சீரானதாக வாட்ஸ்அப் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்தது. இதனை பலரும் மீம்ஸ் போட்டி கிண்டலடித்து வருகின்றனர்.